புதுக்கோட்டையில் தொடரும் மரக்கொலைகள் சமூக ஆர்வலர்கள் கண்டனம்




சுமார்30 ஆண்டுகள் பழமைவாய்ந்த, கீழ இரண்டு வடக்கு முனையில், பாண்டியன் புத்தகம் எதிரில் இருந்த இம்மரம் சில நபர்களால் அவர்களின் சுய தேவைகளுக்காக இன்று வெட்டப்பட்டுள்ளது.புதுக்கோட்டை நகரில் சமீபத்திய நாட்களாகவே இதுபோன்ற தொடரும் சம்பவங்களால் இயற்கை ஆர்வலர்கள் பெரிய அளவில் மனவேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்:தமிழகத்தையும் புதுக்கோட்டை மாவட்டத்தையும் பசுமை மிக்க நகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எங்களைப் போன்ற இயற்கை ஆர்வலர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
சில பல  இயற்கை விரோத கும்பல் இதைப் போன்று தொடர்ந்து புதுக்கோட்டையில் கழுத்து அறுக்கப்பட்டு மரக் படுகொலை செய்து கொண்டு வருகிறார்கள். இந்தக்கொலைகள் அரசு நிர்வாகத்தின் பார்வைக்கு போனாலும் அதற்காக யாரும் கவலைப்படுவதில்லை.ஒரு பக்கம் மரம் வளர்க்கச் சொல்வார்கள். இன்னொரு பக்கம் வெட்டிச் சாய்ப்பார்கள். வெட்டியவர்களுக்கு தண்டனை எதுவும் கிடையாது. வெட்டப்பட்டிருக்கும் இந்த மரத்தினால் யாருக்கு தொந்தரவு. இந்த சமூக விரோதிக்கு கடவுள்தான் தண்டனை தரவேண்டும் என்று அவர்கள் விமர்சிக்க தொடங்கியும் விட்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments