சாலையில் அமர்ந்து மது அருந்தக்கூடாது: இளைஞர்கள் வைத்துள்ள எச்சரிக்கை பதாகை
கீரமங்கலம், மேற்பனைக்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மதுப்பிரியர்கள் சாலை ஓரங்களிலும் குளம், ஏரிக்கரைகளிலும் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதேபோல கீரமங்கலத்தில் இருந்து செரியலூர் செல்லும் சாலையிலும் பலர் அமர்ந்து மது குடித்து விட்டு காலி மது பாட்டில்களை அங்கேயே உடைத்துப் போடுவதுடன் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்களையும் வீசி செல்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் உடைந்த மதுபாட்டில்கள் பொதுமக்கள் கால்களில் குத்துவதுடன் வாகனங்களின் டயர்களையும் பஞ்சராக்கி விடுகிறது. விளைநிலங்களும் பாதிக்கப்படுகின்றன.

இந்தநிலையில் செரியலூர் இனாம் ஊராட்சி இளைஞர்கள் ஒன்றிணைந்து சாலையில் மது அருந்தக்கூடாது என்று விழிப்புணர்வு பதாகை வைத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோவில்களுக்கு செல்லும் சாலையில் இரவு நேரங்களில் மது குடிக்க வருவோர் பாட்டில்களை உடைத்துப் போடுவதால் அடிக்கடி வாகனங்கள் பஞ்சராகி விடுகிறது. நடந்து செல்வோர் காலில் குத்தி காயம் ஏற்படுகிறது. அருகில் உள்ள காவிரி கூட்டுக் குடிநீரேற்றும் நிலையத்திலும் இதேபோல செய்கிறார்கள். அதனால் தான் எச்சரிக்கை பதாகை வைத்துள்ளோம் என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments