`மாணவர் மனசு' என்ற பெயரில் புகார் பெட்டி அரசு பள்ளியில் வைக்கப்பட்டது
பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை தெரிவிக்க ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்கப்படும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கந்தர்வகோட்டை அருகே உள்ள கோமாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் `மாணவர் மனசு' என்ற பெயரில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுகின்ற இன்னல்களை மனுவாக எழுதி இந்த புகார் பெட்டியில் போட்டு விட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு இந்த பெட்டியை திறந்து அதிலுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் பெட்டி வைக்கப்படும் நிகழ்வின்போது பள்ளித் தலைமையாசிரியர் செந்தில்முருகன் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments