பாதி விலையில் புதிய செல்போன் தருவதாக பல லட்சம் மோசடி
விராலிமலை சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனம் பாதி விலையில் புதிய செல்போன் கொடுப்பதாக கூறி பொதுமக்களிடமிருந்து பணத்தை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுங்கச்சாவடி அருகே தாரா ஜோன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஆன்லைன் விலையில் விற்கப்படுவதை விட பாதி விலையில் புதிய செல்போன்கள் தருவதாக பல பேரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக பணம் கட்டியவர்கள் நிறுவனம் முன் திரண்டதால் பரபரப்பு.

திருச்சி புதுக்கோட்டை மணப்பாறை ஆகிய ஊர்களில் உள்ள பொதுமக்கள் அனைவரும் புதிய செல்போன் பாதி விலைக்கு தருவதால் ஆர்வத்துடன் அனைவரும் குறைந்தது பத்தாயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற விளம்பர பலகையை முதலில் வெளியிட்டனர்.

தீபாவளியை முன்னிட்டு இந்த சலுகையை தருவதால் பொதுமக்களை முந்திக் கொள்ளுமாறு அந்த நிறுவனத்திடமிருந்து விளம்பரம் செய்யப்பட்டது.

இதை நம்பி 200க்கும் மேற்பட்டோர் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பணம் கொடுத்து முன் பதிவு செய்து கொண்டனர்.
இந்த நிறுவனத்தை நம்ப வைப்பதற்காக பணம் கட்டியவர்களுக்கு முதலில் 30 பேருக்கு மட்டும் பாதி விலையில் புதிய செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகு யாருக்கும் எந்த தகவலும் அந்த நிறுவனத்திடம் இருந்து வரவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் பணம் கட்டியவர்களுக்கு அந்த நிறுவனம் கொட்டுத்த தொடர்பு எண்களை தொடர்பு கொண்ட போது அந்த எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் பணம் கட்டியவர்கள் சந்தேகமடைந்து கடைக்கு வந்து பார்த்தபோது கடை பூட்டி இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பணம் கட்டியவர்கள் அந்த கடை முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த விராலிமலை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விளம்பரத்தை நம்பி பணம் கட்டி ஏமாந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த நிறுவனத்தின் மீது புகார் அளிக்குமாறும், அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

பின்னர் ஒரு நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி பணம் கட்டி ஏமாந்து கடை முன் திரண்டிருந்தவர்களுக்கு  இது போன்ற போலி விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் இருக்குமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

பாதி விலையில் புதிய செல்போன் தருவதாக கூறி விளம்பரம் செய்து பொதுமக்களிடம் பல லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவானவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விராலிமலை சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனம் பாதி விலையில் புதிய செல்போன் கொடுப்பதாக கூறி பொதுமக்களிடமிருந்து பணத்தை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments