புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 29-ந் தேதி நடக்கிறது
புதுக்கோட்டை மாவட்டத்தில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதற்கு கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே, புதுக்கோட்டை விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments