ஆவுடையார்கோவிலில் நெற்பயிர்களை தாக்கும் புகையான், மஞ்சள் நோய் விவசாயிகள் கவலை
ஆவுடையார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பூவலூர், பிராந்தனி, கருங்காடு, பாண்டிபத்திரம், அமரடக்கி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடி செய்து உள்ளனர். இதற்காக கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டையில் பெய்த தொடர் மழையின் காரணமாக புகையான் மற்றும் மஞ்சள்நோய் தாக்குதலால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் விவசாயத்திற்கு வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments