அறந்தாங்கி நைனா முகம்மது கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்!நைனா முகம்மது கலை அறிவியல் கல்லூரியும் மற்றும் பாரதிதாசன் பல்கலைகழகமும் இணைந்து நடத்தும் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்  பனங்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்றது. இத்துவக்க விழாவை கல்லூரியின் நிறுவனத் தாளாளர் நை.முகம்மது பாருக் இனிதே துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ. தங்கராசு பேசுகையில் எங்களது கிராமத்தை தேர்வு செய்து வருகை தந்துள்ள மாணவிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். நாட்டு நலப் பொதுப் பணி ஆற்றி எங்களது கிராமத்தில் கொரானா தடுப்பூசி செலுத்தியவர் விபரத்தை வீடு வீடாக சென்று கணக்கெடுத்து தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை கூறினார். அதுபோல் கிராம மக்களின் தேவைகளை கண்டறிந்து அதனை செம்மைபடுத்துவதாகவும் கூறினார்.

 இந்த முகாமானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்  என கூறி சிறப்புரையாற்றினார்.  இவ்விழாவில்,  கல்லூரியின் துணை முதல்வர் ஈஸ்வரி வாழ்த்துரை வழங்கினார், வணிகவியல் துறைத் தலைவர் ஏ.புவியரசு கலந்து கொண்டார்,  நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சு.காயத்ரி வரவேற்புரையாற்றினார், நாட்டுநலப் பணித்திட்ட மாணவி பாத்திமா நன்றியுரையாற்றினார். இவ்விழாவிற்க்கான ஏற்பாட்டுகளை மேலாளர் க.மாரிச்சாமி ஏற்பாடு செய்திருந்தார். 

இவ்விழாவில்  பனங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரெ.சுமதி மற்றும் ஆசிரியர்கள் இரா.ராஜேஷ், சு.ரவிசங்கர், இரா. இளங்கோ, சா. ராஜன் மற்றும்  நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நாட்டுநலப்பணித்திட்ட மாணவிகளால் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி  நடைபெற்று, ஊர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments