கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு! மத்திய மந்திரிசபை ஒப்புதல்!!பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 2022-ம் ஆண்டு பருவத்துக்கு கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி, அரவை கொப்பரை தேங்காய்க்கான விலை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 335-ல் இருந்து ரூ.10 ஆயிரத்து 590 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முழு கொப்பரை தேங்காய்க்கான விலை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 600-ல் இருந்து ரூ.11 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தி செலவை விட 57 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்வகையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments