செகந்திராபாத் (ஹைதராபாத்) - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை நீடிக்கப்படுமா?


புதுக்கோட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்று ஹைதராபாத், திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை-க்கு நேரடி ரயில் சேவை வேண்டும் என்பதே. இந்த அத்தனை தேவையை பூர்த்தி செய்யும் ஒரே ரயிலாக கடந்த அக்டோபர் 19 முதல் வண்டி எண்-07685/86 செகந்திராபாத்-ராமேஸ்வரம்-செகந்திராபாத் சிறப்பு ரயில் இயக்கப்பட்டுவருகிறது.

ஒவ்வொரு வாரமும் வண்டி எண்-07685/செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில்,  செகந்தராபாத்திலிருந்து செவ்வாய் இரவு 09:25 மணிக்கு புறப்பட்டு  குண்டூர், நெல்லூர், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூர், காட்பாடி, திருவண்ணாமலை வழியாக புதுக்கோட்டைக்கு புதன் இரவு 10:43 மணிக்கு வந்து 10:45 மணிக்கு புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு அதிகாலை 03:10 மணிக்கு செல்கிறது. மறுமார்கத்தில் வண்டி எண்-07686/ராமேஸ்வரம்-செகந்திராபாத் சிறப்பு ரயில், ராமேஸ்வரத்திலிருந்து வியாழன் இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு வெள்ளி அதிகாலை 03:38 மணிக்கு வந்து 03:40 மணிக்கு புறப்பட்டு சிதம்பரம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா, நெல்லூர், குண்டூர் வழியாக செகந்திராபாத்திற்கு சனி இரவு காலை 07:10 மணிக்கு செல்கிறது. 

புதுக்கோட்டையிலிருந்து குறைந்த பட்ச கட்டணத்தில்  சிதம்பரம்-₹105, திருவண்ணமலை-₹155, காட்பாடி-₹180, திருப்பதி-₹205, செகந்திராபாத்-₹345 என இந்த ரயிலில் பயணிக்கமுடியும் என்பதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த ரயில் ஒரு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. மேலும் பஞ்சபூத ஸ்தலங்களில் 4 ஸ்தலங்களையும்(நீர்-திருச்சி, ஆகாயம்-சிதம்பரம், நெருப்பு-திருவண்ணாமலை, காற்று-ரேணிகுண்டா(ஸ்ரீகாளஹஸ்தி)) இணைக்கும் வகையில் இந்த ரயிலின் வழித்தடம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.  

மொத்தம் 11 சேவைகளை கொண்ட இந்த சிறப்பு ரயிலின் சேவை வரும் டிசம்பர் 30 துடன் முடிவடையவுள்ள நிலையில் இந்த ரயிலை நிரந்த எண் கொண்ட வாரம் "இருமுறை' இயங்கும் ரயிலாக தொடர்ந்து புதுக்கோட்டை வழித்தடத்தில் இயக்கவேண்டும் என்றும் ஒரு வேளை நிரந்தர எண் கொண்ட ரயிலாக தற்போதைக்கு மாற்றும் சூழ்நிலை இல்லை எனில் இந்த சிறப்பு ரயிலை மேலும் 6 மாதங்களுக்கு நீடித்து வாரம் இருமுறை(Bi-Weekly) சிறப்பு ரயிலாக தொடர்ந்து இயக்கவேண்டும் என்பதே புதுக்கோட்டை மக்களின் விருப்பமாகவும் கோரிக்கையாகவும் உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments