ஆவுடையார்கோவில் அரசு பள்ளியில் ராமானுஜன் பிறந்த நாள் கொண்டாட்டம்!



கணிதமேதை ராமானுஜன் பிறந்த தினமான டிசம்பர் 22-ந் தேதி ஆண்டுதோறும் தேசிய கணித நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய கணித தினம் நேற்று கொண்டாட்டப்பட்டது.

அப்போது ராமானுஜன் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. கணிதமேதையின் வாழ்க்கை வரலாற்றை முதுகலை கணிதவியல் ஆசிரியர் சார்மிளா, மாணவர்களுக்கு விளக்கி கூறினார். 6-ம் வகுப்பு மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித மன்றம் சார்பாக போட்டிகள் நடத்தப்பட்டன. 

முடிவில், கணித மன்றச் செயலாளர் கந்தவேல் நன்றி கூறினார். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின் உள்பட‌ அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments