குறைந்த வாடகையில் வேளாண் எந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள்!



குறைந்த வாடகையில் வேளாண் எந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியில் இயங்கிவரும் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக வேளாண் எந்திரங்கள் நில மேம்பாடு மற்றும் சிறுபாசன திட்டக் கருவிகள் விவசாயிகளுக்கு குறைவான வாடகையில் கிடைக்கின்றன. 

அந்த வகையில் மண் தள்ளும் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 970 ரூபாயும், மண் அள்ளும் எந்திரம் சக்கர வகை ஜே.சி.பி. 760 ரூபாயும், நெல் அறுவடை எந்திரம் டிராக்டர் வகை 1,630 ரூபாயும் டிராக்டரில் இயங்கக்கூடிய அனைத்து வகை இணைப்பு கருவிகள் அதாவது நிலக்கடலை பறிக்கும் கருவி, நிலக்கடலை பிரித்தெடுக்கும் கருவி, வைக்கோல் கட்டும் கருவி, நிலம் சமன்படுத்தும் கருவி, விதை விதைக்கும் கருவி, கரும்பு தோகையை தூளாக்கும் கருவி, வைக்கோல் உலர்த்தும் கருவி, ரொட்டவேட்டர், தென்னை மற்றும் இதர கழிவுகளை தூளாக்கும் கருவி அனைத்து வகை உழவுசெய்யும் கருவிகள் ஆகியவற்றிற்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக 400 ரூபாயும், விசை துளைக்கருவி 130 ரூபாயும்(ஒரு மீட்டர் ஆழத்திற்கு) நிலத்தடிநீர் ஆய்வுக் கருவி வேளாண் சார்ந்த பணிகளுக்கு 500 ரூபாயும் இதர பணிகளுக்கு 1000 ரூபாயும் வாடகையாக வசூலிக்கப்படுகிறது.

இதில், சிறு-குறு விவசாயிகள் ஆதிதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை வேளாண்மை பொறியியல்துறை 04322-221816, உதவி செயற் பொறியாளர் புதுக்கோட்டை 99944 05285, உதவி செயற் பொறியாளர், அறந்தாங்கி 94436 04559 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தகவல் பெறலாம் எனவும், இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு புதுக்கோட்டை வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments