ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - புதுகை ஆட்சியர் தகவல்!புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட  ஆட்சித் தலைவர் கவிதா ராமு, தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட் மெட்ரிக் (10ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும்) கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் ப்ரிமெட்ரிக் (ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள்) கல்வி உதவித்தொகை திட்டம் ஆகிய திட்டங்களுக்குரிய கல்வி இணையதள வழி மூலமாக கடந்த 13.12.21 ஆம் தேதி அன்று திறக்கப்பட்டுள்ளது.

மேற்படி திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர், கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு புதுப்பித்தல் விண்ணப்பங்களை 05.01.2022க்குள் உரிய முறையில் பூர்த்தி செய்து விடுதி சார்பான விவரங்கள், சேமிப்பு கணக்கு விவரங்கள் மற்றும் ஆதார் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை கல்வி நிறுவனங்கள் கூர்ந்தாய்வு செய்து மாற்றங்கள் ஏதுமிருப்பின் அதனை சரிசெய்து கொண்டு இணையவழியில் அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் பழங்குடியினர் நல மாணவர்களிடமிருந்து புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதிச்சான்று, வருமானச்சான்று, மதிப்பெண் சான்று, சேமிப்பு கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் வரும் 13.01.2022 விண்ணப்பிக்கவும்,

மேலும் குறித்த காலக்கெடுவிற்குள் தவறாது விண்ணப்பித்து மாணவர்கள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எனவே கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் மாணவர்களுக்குரிய கல்வி உதவித் தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்திடவும்,மாணவர்கள் சார்பான விண்ணப்பங்களை எவ்வித தவறுகளுமின்றி பதிவேற்றம் செய்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு விடுத்துள்ள செய்தி குறிப்பில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments