விடியல் பெற போகும் கோபாலப்பட்டிணம் மக்கள்! விரைவில் ஐந்து இடங்களில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட உள்ளதாக கொடிக்குளம் உதவி பொறியாளர் தகவல்!!கோபாலப்பட்டிணத்தில் குறைந்தழுத்த மின்சாரத்தால் மக்கள் பல வருடங்களாக இருளில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கோபாலப்பட்டிணம் பகுதிகளில் ஐந்து இடங்களில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட உள்ளதால் விடியல் பெற போகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் பகுதியில் 3500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு பல இடங்களில் குறைந்தழுத்த மின்சாரத்தால் மக்கள் அவதிபட்டு வந்தனர். மேலும் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் குறைந்தழுத்த மின்சாரத்தை போக்கும் வகையில் கோபாலப்பட்டிணத்தில் ஐந்து இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 
கடந்த 19.10.2021 அன்று கோபாலப்பட்டிணம் ஆலமரத்தில் 7 மின்கம்பமும், ஆலமரத்தில் இருந்து தோப்பிற்கு செல்லும் வழியில் 6 மின்கம்பம் என மொத்தம் 13 புதிய மின்கம்பங்களை லாரிகளில் கொண்டு வந்து மின்வாரிய ஊழியர்களால் இறக்கிவைக்கப்பட்டது. இதுகுறித்து கொடிக்குளம் துணை மின்நிலைய உதவி பொறியாளரிடம் GPM மீடியா சார்பாக கடந்த இரண்டு மாத காலமாக ஆலமரம் பகுதியில் ஏழு புதிய மின்கம்பங்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து கேட்கப்பட்டது,

அப்பொழுது அவர் கூறியதாவது, கோபாலப்பட்டிணம் பகுதியில் குறைந்தழுத்த மின்சாரத்தால் அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் மனு அளித்திருந்தனர். அதனடிப்படையில் கோபாலப்பட்டிணம் பகுதியில் குறைந்தழுத்த மின்சாரம் உள்ள பகுதியில் புதிய மின்மாற்றி அமைப்பதற்காக புதிய மின்கம்பங்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளது எனவும், பருவ மழை பெய்து வந்ததால் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெறவில்லை எனவும், தற்பொழுது மழை இல்லாத காரணத்தால் மீமிசல் சுற்றுவட்டார பகுதியில் வேலைகள் நடைபெற்று வருவதாகவும், அங்கு வேலை முடிந்தவுடன் கோபாலப்பட்டிணம் பகுதிகளில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி தொடங்கப்படும் எனவும், கோபலப்பட்டிணத்திற்கு மொத்தம் ஐந்து புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

மேலும் கோபாலப்பட்டிணத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அனைத்து மின்கம்பங்களையும் மாற்ற வேண்டும் என GPM மீடியா சார்பாக கோரிக்கையும் வைக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 
எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments