மணமேல்குடியில் 70 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது
மணமேல்குடி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் தலைமையில் போலீசார் கடைவீதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 பேர் சந்தேகப்படியான பார்சலுடன் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் சோதனையிட்டபோது, அவர்கள் 70 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அதனை கொண்டு வந்த அம்மாபட்டினம் பகுதியை சேர்ந்த முகமது ரஹமத்அலி (வயது 54), செல்லப்பன்கோட்டை பகுதியை சேர்ந்த சதாம் ஹுசைன் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், அதன் விற்பனைக்கு உடந்தையாக இருந்த மணமேல்குடி பகுதியை சேர்ந்த கார்த்திக் (32) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments