1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் தொடக்கம்
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 10-ந் தேதி வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று அமலுக்கு வந்தது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகள் நேற்று பள்ளிக்கு வரவில்லை. ஆன்லைன் முறையில் அவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றது. இதில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை நேற்று தொடங்கினர். பள்ளிகள் முழுமையாக திறக்கப்படும் முன்பு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைமுறையில் இருந்தன. இந்தநிலையில் தற்போது மீண்டும் ஆன்லைன் வகுப்பு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெற்றன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments