புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் கல்லூரி செமஸ்டர் தேர்வு நேரடி முறையிலேயே நடத்தப்படும் உயர்கல்வித்துறை திட்டவட்டம்






நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையை கருத்தில் கொண்டு, புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதில் மருத்துவம் மற்றும் துணை மருத்துவ கல்லூரி மாணவர்களை தவிர, மற்ற அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு வருகிற 20-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே ஆன்லைனில் நடந்த கல்லூரி செமஸ்டர் தேர்வை நேரடி முறையில் (ஆப்லைன்) முறையில் நடத்த அரசு திட்டமிட்டு, அதற்காக மாணவர்கள் தயாராகுவதற்கு ஏதுவாக கால அவகாசம் வழங்கி அதன்படி, வருகிற 20-ந் தேதிக்கு பிறகு செமஸ்டர் தேர்வு நடத்துவதற்கு ஏற்றவாறு ஒவ்வொரு கல்லூரிகளும் தேர்வு அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. அந்த தேர்வுக்கு தயாராகுவதற்காக தான் தற்போது படிப்பு விடுமுறை (ஸ்டடி ஹாலிடே) விடப்பட்டு இருக்கிறது. புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், செமஸ்டர் தேர்வு அரசு ஏற்கனவே திட்டமிட்டப்படி நேரடி முறையிலேயே கண்டிப்பாக நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் சூழலுக்கு ஏற்றவாறு, செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவது குறித்த அறிவிப்பு அப்போது தெரிவிக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என்று மாணவர்களின் கோரிக்கை வலுத்து வந்த நிலையில், நேரடி முறையிலேயே நடத்தப்படும் என்று திட்டவட்டமாக உயர்கல்வித்துறை அறிவித்துவிட்ட பிறகும், மாணவர்கள் சிலர் ஆன்லைனில் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்து இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் நேரடி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் உயர்கல்வித்துறை தரப்பில் கூறப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

1 Comments

  1. We want online exam in this semester because of destroying period of this virus......

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.