புதுக்கோட்டை அருகே மழை நீரில் மிதந்து வந்த சிசு உடல் மீட்பு மழை நீரில் மிதந்து வந்த சிசுவின் உடல்.
புதுக்கோட்டை அருகே மழை நீரில் மிதந்து வந்த சிசு உடல் மீட்பு

ஆலங்குடி கருக்காக்குறிச்சி வடக்கு தெரு பகுதியில் மழை நீரில் மிதந்து வந்த ஆண் சிசு உடல் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கருக்காக்குறிச்சி வடக்கு தெரு ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள கூமத்தி வாரியில், தொப்புள் கொடியுடன் ஆண் சிசு, பிறந்த சில மணி நேரத்தில் வீசப்பட்ட நிலையில், மழை நீரில் மிதந்து வந்து சடலமாக தேங்கி நின்றது.
இதனை அப்பகுதியை சேர்ந்த ரவி என்பவர் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வடகாடு காவல் நிலையத்திற்கு இதுபற்றி தகவல் கொடுத்தார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து, கிராம நிர்வாக அலுவலர் அம்பிகாவதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பச்சிளம் குழந்தையை தண்ணீரில் வீசி சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாய் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments