இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது மீமிசல் கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிய சாலைகள்






கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இரவு  ஊரடங்கு அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக இன்று ஜனவரி 06 முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனினும், இந்த புதிய கட்டுப்பாடுகளில், அத்தியாவசிய பணிகளான பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, எரிபொருள் வாகனங்கள் போன்றவை மட்டும் இரவு நேரத்திலும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இரவு  ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா  மீமிசல் கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை கடைவீதியில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி சாலைகள் காணப்பட்டன.‌ அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.

இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை நேரத்தில் வியாபாரிகள் & பொதுமக்கள் கடைவீதியில் இருந்து அவசர அவசரமாக தங்களது வீடுகளுக்கு சென்றனர்.












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments