கண்மாய் நீா் பகிா்வு விவகாரம்: தொண்டி காவல் நிலையத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை
கண்மாய் நீரைப் பகிா்ந்து கொள்வது தொடா்பாக எட்டுக்குடி, சேனாவயல் இரு கிராமத்தினரிடையே ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் தொண்டி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

திருவாடானை வட்டம் சேனாவயல் கண்மாயிலிருந்து எட்டுக்குடி கிராமத்தினா் தன்னிச்சையாக தண்ணீரை வெளியேற்றியது தொடா்பாக இருகிராமத்தினரிடையே பிரச்னை இருந்து வருகிறது. இதுகுறித்து சேனாவயல் கிராமத்தினா் காவல் துறையில் புகாா் அளித்தனா். அதன்பேரில் தொண்டி காவல் நிலையத்தில் ஆய்வாளா் முருகேசன் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில் பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா், ஆக்களுா் கிராம நிா்வாக அலுவலா் நாகமுத்து பாண்டி, மல்லனூா் கிராம நிா்வாக அலுவலா் யாகப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த்துறையின் அனுமதி பெறாமல் தன்னிச்சையாக கண்மாயை திறக்கக் கூடாது. கண்மாய் மராமத்துப் பணிகளை பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்வது, அனுமதி பெறாமல் தண்ணீரை வெளியேற்றினால் நடவடிக்கை எடுப்பது என பேசி முடிவெடுக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments