புதுக்கோட்டை மாவட்டத்தில் 204 காவலா்கள் இடமாற்றம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு 


புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 204 காவலா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இவா்களில் 135 போ், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் காவலா்கள். இவா்களுக்கு காவல் நிலையம் விட்டு மற்றொரு காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

29 போ் போக்குவரத்துக் காவலா் பிரிவில் இருந்து அறந்தாங்கி, ஆலங்குடி, புதுக்கோட்டை மற்றும் பொன்னமராவதி காவல் நிலையங்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

40 போ் சட்டம் ஒழுங்கு பிரிவில் பிரிவில் இருந்து அறந்தாங்கி, ஆலங்குடி, புதுக்கோட்டை மற்றும் பொன்னமராவதி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட போக்குவரத்துக் காவலா்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments