கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் அதிகரிக்கும் விபத்துக்கள்!வேகத்தடுப்பு, எச்சரிக்கை பலகை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை




    

 மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்கள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் கோபாலப்பட்டிணத்திற்கு செல்ல பிரிவு சாலை உள்ளது. இந்த பிரிவு சாலை அருகே கோவில் மற்றும் அரசு ஆண்கள் தங்கும் விடுதி அமைந்துள்ளது. இந்த சாலையானது கோபாலப்பட்டிணம் செல்வதற்கு முக்கிய சாலையாகும்.இதனால், எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாக உள்ளது.

இந்நிலையில் இந்த சாலையில், நாளுக்குநாள் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், வாகனங்கள் அசுர வேகத்தில் சென்று விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி விட்டது. அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பல பேர் படுகாயம் அடைகின்றனர்.

எனவே அதிக விபத்து ஏற்படும் பகுதியில், பேரி கார்டுகள் வைக்க மீமிசல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விபத்தை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறையினரும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 26.01.2021 அன்று இந்த சாலையில் இரு சக்கர வாகனம் விபத்தில் சிக்கி இளைஞர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments