கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தைத் தவிர்க்க ஓரமாக ஒதுங்கிய இருசக்கர வாகனம்! கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் பாய்ந்தது!! இளைஞர் படுகாயம்


இருசக்கர வாகனம் மீது மோதுவதைத் தவிர்க்க சாலையில் ஓரமாக ஒதுங்கிய இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலை ஓரத்தில் உள்ள கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் SP மடத்தை நோக்கி இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று ஜனவரி 26 காலை 9 மணியளவில் கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் முன்னே சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கோபாலப்பட்டிணத்திற்கு செல்ல  வளைந்ததையடுத்து அதன் மீது மோதாமல் இருக்க, பின்னோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை இளைஞர் சற்று ஓரமாக திருப்பியதால் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கோபாலப்பட்டிணம் நுழைவாயில் அருகில் உள்ள கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், SP மடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பாக்கத்தை சேர்ந்த வாலிபர் படுகாயமடைந்தார். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தின் முன்பகுதி நொறுங்கியது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் விபத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments