கோபாலப்பட்டிணத்தில் வானவில்... பழைய காலணியில் காண கிடைத்த இயற்கையின் அரிய காட்சி






கோபாலப்பட்டிணத்தில் தெரிந்த வானவில் பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இயற்கையின் அழகைக் கண்டு நாம் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மெய்மறந்து போவதுண்டு. மழை, கடல், மலைகள் என அனைத்தின் அழகையும் நாம் வியந்து ரசிப்போம்.

அதேபோல், சில சமயங்களில் வண்ணமயமான வானவில் நம் கண்களுக்கு விருந்தாக அமையும் அல்லவா? அப்படித்தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் தெரிந்த வானவில் பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது

மிகப் பெரும் அளவுக்கு இருந்த அந்த வானவில்லை  பொதுமக்கள் அனைவரும் கண்டு ரசித்தனர்.

கோபாலப்பட்டிணத்தில் காண கிடைத்த இயற்கையின் இந்த அரிய காட்சி மக்களை பிரமிக்க வைத்தது.

பொதுமக்கள் புகைப்படம் எடுத்தும், ரசித்தும் பெருமகிழ்ச்சி அடைந்து வாட்ஸ்ஆப் ஸ்ட்டேஸ் மற்றும் சமூக வளைத்தளங்களில்  பதிவிட்டு வருகின்றனர்

புகைப்படம் எடுத்த நாள் : 30-01-2022

இது போன்று நமதூர் பற்றிய இயற்கையான புகைப்படங்களை எடுத்தால் எங்களுக்கு   அனுப்புங்கள். அதை தாராளமாக GPM மீடியாவில் பதிவிடுகிறோம்

வானவில் எப்படி தோன்றுகிறது?

மழைத்துளியின் கோளப் பகுதியின் மீது சூரிய ஒளி ஊடுருவி நமது கண்ணில் படும்போது தோன்றுவதே வானவில். ஒளிவிலகல் என்னும் refraction தான் இந்தச் செயல். இயற்கையின் அழகிய தோற்றங்களில் ஒன்றான ஏழு வண்ணங்கள் கொண்ட வானவில் தோன்ற மழைதான் வேண்டும் என்றில்லை. ஏதேனும் நீர்த் துளிகளோ, பனி படர்ந்த கண்ணாடியோ போதும். சூரிய ஒளியில் வண்ணஜாலங்கள் தோன்றும். வானத்தில் தான் என்றில்லை, நீர்நிலைகளிலும், முகம் பார்க்கும் கண்ணாடிகளிலும் , கார் windshield- லும் இது ஏற்படும். வானத்தில் தோன்றுவதே வானவில் எனப் படுகிறது.

இதற்கு முக்கிய நிபந்தனைகள் :

 சூரியன் நமக்குப் பின்புறம் அடிவானத்திலிருந்து 42 டிகிரி உயரம் மட்டுமே, அல்லது அதற்கும் கீழ், இருக்க வேண்டும். சூரியன் எவ்வளவு கீழே இருக்கிறதோ அவ்வளவு பெரிய வட்டமாக வானவில் தெரியும். மழைத்துளிகளோ, பனியோ நமக்கு முன்புறம் இருக்க வேண்டும் . அப்போது அவற்றின் மீது படும் சூரிய ஒளி முறிந்தது போலாகி நம் பார்வையில் (கண்ணாடியில் காண்பது போன்று ) வண்ணங்களை அள்ளி வீசும்.

வானவில்லில் பல வண்ணச் சேர்க்கைகள் ஒன்றின் மீது ஒன்று படர்ந்து( overlapped) காணப்பட்டாலும் நம் கண்களுக்கு VIBGYOR எனச் சுருங்கச் சொல்லப் படும் ஏழு வண்ணங்கள்தான் தெளிவாகத் தோன்றும்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments