கோட்டைப்பட்டிணத்தில் காவல்துறை DSP தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்...!


கோட்டைப்பட்டினத்தில்  குற்றங்களை தடுக்கும் பொருட்டு CCTV (சிசிடிவி) கேமரா அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோட்டைப்பட்டிணம் பெரிய பள்ளி வளாகத்தில் நேற்று (30.01.22) மாலை 5 மணியளவில்  பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஏ.மனோகரன் (DSP) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தை கோட்டைப்பட்டிணம் முஸ்லீம் ஜமாத் (வக்ஃபு) செயலாளர் ஜிம்.சரிப் அப்துல்லாஹ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி துவக்கி வைத்தார்.

இதில் கட்டுமாவடி துவங்கி முத்துகுடா வரையிலான ECR பகுதி அனைத்து ஜமாத்தார்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஊர் மக்களின் நலன் கருதி அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு அலாரங்கள் ஏன் பொருத்த வேண்டும் என்று காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஏ.மனோகரன் (DSP) அவர்கள் மற்றும் கோட்டைப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. எஸ்.ரவிச்சந்திரன் (Inspector) மற்றும் துணை ஆய்வாளர்  R.பிரபாகரன் (S.I) ஆகியோர் விழிப்புணர்வு சிற்றுரையாற்றினர்.

மேலும் இக்கூட்டத்தில் கண்காணிப்பு கேமரா (CCTV),  பாதுகாப்பு அலாரம் (Door Alarm), வகணங்களுக்கான ஜிபிஎஸ் கருவிகள் ஆகியவற்றின் பயன்பாடுகளும் அதை பற்றிய விழிப்புணர்வு சம்பந்தமான விளக்கங்களையும் கோட்டைப்பட்டினம் நூன் டெக் சொல்யூஷன்ஸ் (NOON TECH Solutions) மார்க்கெட்டிங் & டெக்னிக்கல் ஹேட் ஏ.எம்.ஹாரிஸ் மற்றும் ஏ.எம்.அசார் ஆகியோர்  ஜமாத்தார்களுக்கு எடுத்ததுரைத்தனர்.

இக்கூட்டத்தில் KPM உதவும் கரங்கள் தன்னார்வ இளைஞர்கள் வாட்ஸ் ஆப் குழுமம் சார்பில் சமூக ஆர்வலர் அஜ்மீர் கான் அவர்கள் கோட்டைப்பட்டிணம் பாதுகாப்பில் இளைஞர்களின் பங்களிப்பு குறித்து சிலாகித்து பேசினார்.

இக்கூட்டத்தை கோட்டைப்பட்டிணம் முஸ்லீம் ஜமாத் (வக்ஃப்) நிர்வாகிகள் சிறப்பாக ஏற்படு செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments