புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயுதப்படை வளாகத்தில் பகுதிநேர நூலகம் மற்றும் மூலிகை தோட்டம் திறப்பு
மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு .V. பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படியும், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.A.சரவண சுந்தர் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதல்படியும், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சார்பில் மாவட்ட நூலக ஆணைக் குழு சார்பில் பகுதிநேர நூலகம் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் காவலர்களின் நலன் கருதி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் 04.02.2022 -ஆம் தேதி இன்று துவங்கி வைக்கப்பட்டது . 

இந்த பகுதி நேர நூலகத்தில் போட்டித் தேர்வுகள், தமிழ் இலக்கியம், வரலாறு, புதினம், மருத்துவம் மற்றும் பல்வகை ஆகிய தலைப்புகளில் சுமார் 1400 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து காவலர்கள் பயன்பாட்டிற்காக நூலக வளாகத்திற்குள் சுமார் 100 மூலிகை செடிகளைக் கொண்டு மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய முயற்சி புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) திரு.B. ராஜேந்திரன் மற்றும் மாவட்ட நூலக அலுவலர் திரு.சிவக்குமார் ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.முருகராஜ், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு.கோபிநாத் , உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தார்கள்.

என்றும் மக்கள் நலனிற்கும் பாதுகாப்பிற்கும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments