அஞ்சல் வாக்கு படிவம் பெற அரசு அலுவலர்களுக்கு அழைப்பு




தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்


புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

 
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச் சாவடி அலுவலர்கள் மற்றும் இதர தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களில் தகுதியானவர்களுக்கு அஞ்சல் வாக்குகள் வழங்கப்படும்.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அஞ்சல் வாக்குகள் பெற படிவம் 15-ல் தங்களது பெயர் எந்த நகர்ப்புற உள்ளாட்சி  அமைப்பின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதோ  அந்த நகர்புற உள்ளாட்சி அமைப்பின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம்  வாக்குப்பதிவு நாளுக்கு 7-தினங்களுக்கு முன்னர் சென்றடையும் படி விண்ணப்பித்திட வேண்டும்.

 இந்த விண்ணப்பத்துடன் தங்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பணிக்கான உத்தரவு நகல் ஒன்றினையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

இந்த விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து தகுதியான அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்குவார்கள்.

அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை பெற விண்ணப்ப படிவங்கள் (படிவம் 15) மாவட்ட ஆட்சியரக உள்ளாட்சி தேர்தல் பிரிவு, நகராட்சி, மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments