கோபாலப்பட்டிணம் மார்க்க அறிவு வாட்சாப் குழுமம் நடத்தும் பரிசளிப்பு நிகழ்ச்சி.....!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில்  இஸ்லாமிய மார்க்க விஷயங்களை அதன் தூய வடிவில் தெரிந்து கொள்வதற்காக சில GPM சகோதரர்களால் தொடங்கப்பட்ட ஒரு சிறிய முயற்சி வாட்ஸ்அப் குழுமத்தின் மூலம்  ஆரம்பிக்கப்பட்ட "மார்க்க அறிவு" எனும் குழுமம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நன்றாக நடந்து வருகிறது
அதன் அடிப்படையில் தினம்தோறும் குர்ஆனில் இருந்தும் ஹதீஸ்களிலிருந்து கேள்வி-பதில் நிகழ்ச்சி/போட்டி நடந்து வருகிறது. சகோதரர்கள் தங்களுக்கு எழும் மார்க்க சந்தேகங்களுக்கு குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் தெளிவு பெறவும் இக்குழுமத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது, அல்ஹம்துலில்லாஹ்.


ஒவ்வொரு நூறு கேள்விகளுக்கும் பரிசு தரப்படும் என்று இந்த குழுமத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.

800 கேள்விகளுக்கு மேல் கடந்து விட்ட நிலையில் உறுப்பினர்களை ஆர்வ மூட்டும் வகையில் கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்தவர்களுக்கு  பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 

இன்று 18/02/2022 வெள்ளிக்கிழமை அன்று ஜும்மாவுக்கு பிறகு நமதூர் பெரிய பள்ளிவாசளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

அந்நிகழ்ச்சியில் ஜமாஅத் நிர்வாகிகள், ஆலிம் பெருமக்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பரிசு அளிப்பு நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு அன்போடு மார்க்க அறிவு  குழுமத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்..

மார்க்க விளக்கங்களை பெறவும் கேள்வி - பதில் நிகழ்ச்சி மூலம் குர்ஆன், ஹதீஸ் தொடர்பை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்ட இக்குழுமத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் இனிவரும் காலங்களில் அதிகப்படியான மக்கள் இன் நிகழ்ச்சியில் பங்குபெறணுமாய் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கின்றோம் ... 

தொடர்புக்கு..
மார்க்க அறிவு குழுமம்...
கோபாலப்பட்டிணம்.
Ph-+917708741786,
      +919842898730

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments