ப்ரீ பயரா? பெற்றோரா?.. சென்னையில் பள்ளி மாணவன் தற்கொலை..!

புழல் அருகே செல்போனில் கேம் விளையாடி வந்ததை தாய் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை: புழல் அடுத்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்கள் தனசேகரன் - மீனா தம்பதி. இவர்களுக்கு 16 வயதில் சுரேஷ் என்ற மகன் இருந்தான். சிறுவன் கொளத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், சுரேஷ் எந்நேரமும் ப்ரீ பயர் கேமையே விளையாடி கொண்டு மற்ற வேளைகளில் ஈடுபடாமல் இருந்துள்ளான்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாய் மீனா சுரேஷை கண்டித்துள்ளார். தாய் திட்டியதால் கோபித்துக்கொண்டு யாரிடம் பேசாமல் இருந்த சுரேஷ் நேற்று முன்தினம் திடீரென மாயமாகி இரவு வரை வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்து எங்கேயும் சுரேஷ் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இவர்களது வீட்டுக்கு முன்னால் உள்ள பழைய வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததை கண்டு மீனாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சிறுவன் மீனாவின் புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதை கண்டு தனசேகரனும், மீனாவும் கதறி துடித்தனர்.

சம்பவம் அறிந்து வந்த புழல் போலீசார் சுரேஷின் சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ப்ரீ பயர் கேமை அதிகபட்சம் பள்ளி சிறுவர்களே விளையாடி வரும் நிலையில் பெற்றோர் அதனை கண்டிக்கும்போது பல இடங்களில் சிறுவர்கள் இவ்வாறான முடிவை தேடிக்கொள்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ப்ரீ பயரா? பெற்றோரா?.. சென்னையில் பள்ளி மாணவன் தற்கொலை..!

புழல் அருகே செல்போனில் கேம் விளையாடி வந்ததை தாய் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை: புழல் அடுத்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்கள் தனசேகரன் - மீனா தம்பதி. இவர்களுக்கு 16 வயதில் சுரேஷ் என்ற மகன் இருந்தான். சிறுவன் கொளத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், சுரேஷ் எந்நேரமும் ப்ரீ பயர் கேமையே விளையாடி கொண்டு மற்ற வேளைகளில் ஈடுபடாமல் இருந்துள்ளான்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாய் மீனா சுரேஷை கண்டித்துள்ளார். தாய் திட்டியதால் கோபித்துக்கொண்டு யாரிடம் பேசாமல் இருந்த சுரேஷ் நேற்று முன்தினம் திடீரென மாயமாகி இரவு வரை வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்து எங்கேயும் சுரேஷ் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இவர்களது வீட்டுக்கு முன்னால் உள்ள பழைய வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததை கண்டு மீனாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சிறுவன் மீனாவின் புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதை கண்டு தனசேகரனும், மீனாவும் கதறி துடித்தனர்.

சம்பவம் அறிந்து வந்த புழல் போலீசார் சுரேஷின் சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ப்ரீ பயர் கேமை அதிகபட்சம் பள்ளி சிறுவர்களே விளையாடி வரும் நிலையில் பெற்றோர் அதனை கண்டிக்கும்போது பல இடங்களில் சிறுவர்கள் இவ்வாறான முடிவை தேடிக்கொள்வது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...

Post a Comment

0 Comments