மீமிசலில் ஏடிஎம்- ல் கேட்பாரற்று கிடந்த 4 ஆயிரம் ரொக்கப் பணம், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உதவியுடன் வங்கி நிர்வாகத்திடம் ஒப்படைத்த பெண்..கடந்த 18-02-2022  வெள்ளிக்கிழமை, மீமிசல் சுந்தரவடிவேலு கிளினிக்  அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்ற பெண், ஏற்கனவே ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்கும் பகுதியில் இருந்த ரூபாய் 4 ஆயிரம் ரொக்கப் பணத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்பு அந்தப் பணத்துக்கு உரியவர் யாரும் இருக்கிறார்களா என தேடிப் பார்த்தார். ஏடிஎம் மையத்திற்கு வெளியில் யாரும் இல்லாததால் அந்தப் பணம் தவறுதலாக விட்டுச் சென்றிருக்கலாம் என நினைத்து, அதை உரிய நபரிடம் ஒப்படைப்பதற்காக அந்த பணத்தை எடுத்து, உதவிக்காக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மீமிசல் பகுதி நிர்வாகிகளை தொடர்பு கொண்டார். 

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆலோசனைப்படி  அன்றைய தினமே சம்பந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு போன் மூலம் தகவல் சொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பின்பு பணி நாளான இன்று திங்கள்கிழமை, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் உதவியுடன் முறைப்படி ரூபாய் 4 ஆயிரம் ரொக்கப் பணம் பாரத் ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேர்மையாக நடந்து கொண்ட அந்த பெண்ணுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது...

தகவல்:
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
மீமிசல் நகரம்,
புதுக்கோட்டை மாவட்டம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments