ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளுக்குப் பின் கல்லூரிகள் திறப்பு எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு


பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும்  கலை அறிவியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் ஆன்லைன் வழி தேர்வுக்கு பின்னர் பொறியியல் மாணவர்களுக்கு வரும் மார்ச் 7-ம் தேதி முதல் மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2, 3 மற்றும் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 7 முதல் ஜூன் 11 வரை நடைபெறும் என்றும், ஜூன் 22 -ம் தேதி நடப்பு செமஸ்டருக்கான எழுத்துத் தேர்வு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments