பொன்னேரி: தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு


பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே திருப்பாலைவனத்தை அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்த். இவரது மூன்றரை வயது ஆண் குழந்தை சஞ்சீஸ்வரன். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சஞ்சீஸ்வரன், அங்கு சமையலுக்கு நறுக்கி வைத்திருந்த தேங்காய் துண்டை எடுத்து சாப்பிட்டான்

அப்போது, தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கிக் கொண்டதால் மூச்சு திணறிய சஞ்சீஸ்வரன் மயங்கி விழுந்தான். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், சஞ்சீஸ்வரனை பழவேற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற சஞ்சீஸ்வரன், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சஞ்சீஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து, திருப்பாலைவனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments