துபாயில் தமிழகத்தை சேர்ந்த இந்து தொழிலாளியின் உடலை நல்லடக்கம் செய்த இஸ்லாமியர்கள்.. நெகிழ்ச்சி!


துபாய்: துபாயில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை இந்து முறையப்படி இசுலாமியர்கள் இறுதிச்சடங்கு செய்தனர். இது மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடுகள், பல்வேறு மத குழுக்களிடையே மோதல்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வகுப்புவாத பதற்றம் பற்றிய செய்திகளை நாம் அடிக்கடி கேட்க நேரிடுகிறது. தற்போது ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் பெரும் பதற்றம் நிலவி வருவது அனைவரும் தெரிந்த ஒன்று.

இந்த மத பாகுபாடு, ஜாதி பாகுபாடு எதற்கு? நாமெல்லாம் இந்தியர்கள் என்பதை ஐக்கிய பிரபு அமீரகத்தில் நிரூபித்துள்ளனர் இஸ்லாமியர்கள். தமிழ்நாட்டின் வேலூர் பகுதியை சேந்தவர் அருணா தங்கப்பா (58).

மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்
இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் தான் வேலை செய்த இடத்தில் இருந்து வெளியேறி வசித்து வந்தார். இதனால் அவருக்கு தெரிந்தவர்கள் இந்திய துணை தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி வேலூரில் வசித்து வரும் அவரது சகோதரர் அன்புவுக்கு கூறப்பட்டது

தனது சகோதரர் ஏற்கனவே விவகாரத்து பெற்றவர். இதனால் அவரது உடலை துபாயிலேயே தகனம் செய்ய வேண்டும் என்று அன்பு கேட்டுக் கொண்டார். எனினும் அதற்கான ஆவணங்கள் கிராம நல அலுவலரிடம் இருந்து பெற்றுத்தர தாமதம் ஏற்பட்டது. பின்னர் இந்த ஆவணங்கள் உரிய அதிகாரிகளிடம் சமர்பிக்கப்பட்டது

இறுதிச் சடங்கு செய்த இசுலாமியர்கள்
இதனை தொடர்ந்து இந்திய துணை தூதரத்தின் ஒத்துழைப்புடன் கடந்த 6-ம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை இந்து சமுதாய முறைப்படி அருணா தங்கப்பா உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு ஜெபல் அலி மயானத்தில் மின்சாரம் மூலம் தகனம் செய்யப்பட்டது. இந்த பணியில் சமூக ஆர்வலர்கள் முதுவை ஹிதாயத், லெப்பைக்குடிக்காடு சையது சலீம் பாஷா, திருவாரூர் நிஜாம், சென்னை வெங்கட், மதுரை பாலாஜி, சென்னை பாலாஜி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

மனிதாபிமானம்
தனது சகோதரரின் உடலை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் அவரது சகோதரர் நன்றி தெரிவித்தார். மேலும் அவரது அஸ்தி துபாயில் உள்ள கடல் பகுதியில் கரைக்கப்பட்டது. துபாயில் இந்து சகோதரரின் உடலை இஸ்லாமியர்கள் தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டது மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments