கோபாலபட்டிணத்தில் மாலை நேரத்தில் காட்சியளித்த செவ்வானம்


கோபாலபட்டிணத்தில் மாலை நேரத்தில்    செவ்வானம் காட்சியளித்தது

வானில் அவ்வப்போது வர்ணஜாலம் நிகழ்வதுண்டு அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள
கோபாலபட்டிணத்தில் இன்று (23-02-2022) புதன்கிழமை  மாலையில் செவ்வானத்தில் காட்சியளித்தது .இதை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

வானம் நிறம் மாறுவது ஏன்?

பகல் பொழுதில் நீல நிறத்தில் தெரியும் வானம், காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் ஏன் வேறு நிறத்தில் தெரிகிறது.?

வானம் நீல நிறமாகத் தெரிவதற்கு ஒளிச்சிதறல் என்ற விளைவே காரணம்.

சூரிய ஒளி காற்று மண்டலத்திலுள்ள வாயுக்கள் மற்றும் துகள்களின் வழியே செல்வதால் அனைத்து இடங்களிலும் பரவுகிறது. சூரிய ஒளியில் பல வண்ணங்கள் இருப்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த விடயம், இந்த வண்ணங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான அலைநீளம் கொண்டவை. அதனால் சூரிய ஒளி பரவும் போது குறைந்த அலைநீளம் கொண்ட நீல நிறம் விரைவாக பரவுகிறது. இதனால் தான் பகல் நேரத்தில் வானம் நீலநிறத்தில் தோன்றுகிறது.

ஆனால் காலை மற்றும் மாலையில் மட்டும் ஏன் வானம் வேறு நிறத்தில் தோன்றுகிறது? அதற்கும் இந்த விளைவு தான் காரணம். காலை மற்றும் மாலை நேரங்களில் சூரிய ஒளி பரவ அல்லது மறைய ஆரம்பிக்கும் நேரத்தில் அதிக அலைநீளம் கொண்ட பிற நிறங்கள் (சிவப்பு, ஆரஞ்சு அல்லது மஞ்சள்) அதிகளவில் ஒளிச்சிதறல் அடைந்து நம் கண்களுக்குத் தெரிகின்றனஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments