காரைக்குடி-திருவாரூர் வழித்தடத்தில் - பகல், இரவு நேர விரைவு ரெயில்களை சென்னைக்கு இயக்க வேண்டும் பட்டுக்கோட்டை ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை








காரைக்குடி-திருவாரூர் வழித்தடத்தில் - பகல், இரவு நேர விரைவு ரெயில்களை சென்னைக்கு இயக்க வேண்டும் பட்டுக்கோட்டை ரெயில் பயணிகள் சங்கம் கோரிக்கை வைத்தனர்

பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச்சங்கத் தின் தலைவர் என். ஜெயராமன் தலைமையிலான குழுவினர்,திருச்சியில் கூடுதல் ரெயில்வே பொதுமேலாளர் மல் லையா மற்றும் ரெயில்வேத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

காரைக்குடி திருவாரூர் வழித்தடத்தில் இரவு நேர மற் றும் பகல் நேர விரைவு ரெயில்களை சென்னைக்கு இயக்க வேண்டும். மதுரை, ராமேஸ்வரம், திருநெல்வேலி பகுதிகளுக்கு ரெயில் வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் ரெயில் பயணிகள் சங்க, பொது நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இத்தடத்தில் தேவையான அளவு ரெயில்களை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருவதாகவும், திருவாரூர் காரைக்குடி அகல ரெயில் பாதையில் உள்ள ரெயில்வே கேட்டுகளுக்கு முன்னாள் ராணுவத்தினரை இரவு நேரப் பணிக்கு, பணியமர்த்த தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூடுதல் ரெயில்வே பொதுமேலாளர் அப்போது தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments