புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்




புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் மற்றும் பொன்னமராவதி ஒன்றியம், நகரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.61.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டடங்கள், அறிவியில் ஆய்வகத்தினை மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (14.03.2022) துவக்கி வைத்து, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
இந்நிகழ்வுகள் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.செல்வி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் அவர்கள் பேசியதாவது;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் உடல் நலனில் அக்கரைக் கொண்ட அரசாக திகழ்கிறது. அதன்படி கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் 48 திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற மருத்துவத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் இன்றையதினம் புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நடைபெறும் இந்த குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்களில் 1 முதல் 19 வரை வயதுள்ள 4,08,358 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வரை வயதுள்ள 1,23,088 மகளிருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் வழங்கப்படுகிறது.
மேலும் தேசிய குடற்புழு நீக்க மருந்து வழங்கும் சிறப்பு முகாம் இன்றும் மற்றும் 17.03.2022 முதல்; 19.03.2022 வரை ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் 21.03.2022 அன்று நடைபெறவுள்ளது. இம்முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் பேசினார்
.
பின்னர் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், நகரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ், ரூ.26.94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டடங்களையும், ரூ.34.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியில் ஆய்வகத்தினையும் இன்றையதினம் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வுகளில்; புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி, பொன்னமராவதி ஒன்றியக் குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அ.முத்து மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments