15/03/2022 செவ்வாய் கிழமை தொண்டியில் நமது நாட்டுப்படகு மீனவர்களின் எழுச்சிமிக்க போராட்டம்




அன்பிற்கினிய நாட்டுப்படகு மீனவ சொந்தங்களே! 

15/03/2022 செவ்வாய் கிழமை தொண்டியில் நமது நாட்டுப்படகு மீனவர்களின் எழுச்சிமிக்க போராட்டம்

"கடலில் இறங்கி  கண்டண ஆர்ப்பாட்டம்" நடைபெற உள்ளது.

அன்று  நாட்டுப்படகு மீனவர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தமும் நடைபெற  உள்ளது.

எனவே இந்த போராட்டம் சிறப்பான வெற்றிபெற நாட்டுப்படகு மீனவர்களாகிய நாம் நமது படகுகளை  இன்று மார்ச் 14 - திங்கள் கிழமை   மாலையிலிருந்தே  நிறுத்தி  வைக்க வேண்டுகிறோம்.  மேலும் நமது படகு ஒவ்வொன்றிலும் கறுப்பு கொடி கட்டி நமது எதிர்ப்பை தெரிவிப்பதுடன்  அதனை செல்போனில் படம் பிடித்து அந்தந்த கிராமத்தின் பெயர் விபரங்களை பதிவு செய்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் இணைய தளங்களில்  வெளியிட  வேண்டுகிறோம். அப்படி வெளியிடும் பொழுது கீழ்க்கண்ட வாசகங்களையும் எழுதி வெளியிடவும் வேண்டுகிறோம். 


விசைப்படகுகளின் அத்துமீறிய மீன்பிடிப்பால் தொடர் பாதிப்புக்கு உள்ளாகிவரும் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக மார்ச் 15 -ல் தொண்டியில் கடல் தொழிலாளர் சங்கம் (Citu) மற்றும் இராமநாதபுரம் மாவட்ட அனைத்து  நாட்டுப்படகு மீனவ கிராம மக்கள் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் நாங்களும் பங்கேற்கிறோம்.

 இந்த நிகழ்ச்சியினை அந்தந்த கிராம நிர்வாகமே முன்னின்று  ஆண்களும் பெண்களுமாக கூடி நின்று செய்திடவும் வேண்டுகிறோம்.

மார்ச் 15 - ம் தேதி காலை சரியாக 10 மணியளவில் தொண்டி மீன்பிடி துறைமுகத்தில் மாதா கோவில் எதிர்புறம் கடற்கரையில் நடைபெறும் போராட்டத்தில் ஆண்களும்,  பெண்களும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

இவண்
 M.கருணாமூர்த்தி ஒருங்கினைப்பாளர்
 இராமநாதபுரம் மாவட்ட அனைத்து நாட்டுப்படகு மீனவ கிராம ஒருங்கிணைப்பு குழு

செல்: 94434 05840


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments