கோபாலப்பட்டிணத்தில் குப்பையில் பற்றி எரிந்த தீ

   
துரிதமாக செயல்பட்டு தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த வீடுகள் தீ விபத்தில் இருந்து தப்பியது.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி அருகே உள்ள கோபாலப்பட்டிணம் பழைய காலனி பகுதியில் சிலர் குப்பைகளை கொட்டி வந்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் பலமுறை எச்சரிக்கை செய்தும் அவர்கள் குப்பை கொட்டுவதை நிறுத்தவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு அங்கு இருந்த குப்பைகளில் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது.


இதனால் அதிர்ச்சியடைந்த அருகே வசிப்பவர்கள் தீ விபத்து குறித்து வார்டு உறுப்பினருக்கு தகவல் கொடுத்தனர்.அக்கம்-பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் தீப்பிடித்த குப்பைகளின் மேல் தண்ணீர் ஊற்றி தீ அணைக்கப்பட்டது. துரிதமாக செயல்பட்டு தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த வீடுகள் தீ விபத்தில் இருந்து தப்பியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments