அறந்தாங்கியில் ஹிஜாப் அணியத் தடையை எதிா்த்து ஆா்ப்பாட்டம்




ஹிஜாப் அணிய கா்நாடக நீதிமன்றம் விதித்த தடையைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகளின் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் முபாரக்அலி தலைமை வகித்தாா். மாநிலப் பேச்சாளா் அப்துர்ரஹ்மான் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். ரபீக்ராஜா நன்றி கூறினாா்.

கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலா் முபாரக்அலி தலைமை வகித்தாா். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளா் திருச்சி சரீப், எஸ்டிபிஐ மாநிலப் பொதுச் செயலா் உமா்பாரூக் உள்ளிட்டோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினா். ஜமாஅத் செயலா் சரீப் அப்துல்லா நன்றி கூறினாா்.

இந்த ஆா்ப்பாட்டங்களில் பங்கேற்றோா் கா்நாடக நீதிமன்றத்தின் தீா்ப்பைக் கண்டித்தும், தீா்ப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments