சிங்கம்புணரி அருகே வீடுவீடாகச் சென்று ஊராட்சி வரவு, செலவு விவரம் வழங்கிய தலைவர்
கே.நெடுவயல் கிராமத்தில் வரவு, செலவு கணக்கு விவரங்களை வீடு, வீடாகச் சென்று வழங்கிய ஊராட்சித் தலைவர் சரவணன்.

சிங்கம்புணரி அருகே ஊராட்சி வரவு, செலவு கணக்கு விவரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வீடு, வீடாகச் சென்று ஊராட்சித் தலைவர் வழங்கினார்.

சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் கே.நெடுவயல் ஊராட்சியில் கே.நெடுவயல், பழைய நெடுவயல், பன்னப்பட்டி, வெள்ளியங்குடிப்பட்டி, காயாம் பட்டி, பி.அய்யாப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.

ஊராட்சித் தலைவராக சரவ ணன்(40) உள்ளார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது வெளிப்படையாக நிர்வாகம் செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி அவர் 2 ஆண்டுகளாக ஊராட்சி வரவு, செலவு விவரங்களை வெளியிட்டு வருகிறார். மக்கள் பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வரு கிறார்.

அக்கிராமத்தில் முழுமையாக குடிநீர் பிரச்சினையைத் தீர்த்துள் ளார். இந்நிலையில் 2021-22-ம்ஆண்டுக்கான வரவு, செலவு விவரங்களை வெளியிட்டார். மேலும் வரவு, செலவு விவரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரத்தை வீடு, வீடாகச் சென்று மக்களிடம் வழங்கினார்.

அவரது செயலை திருப்பத்தூர் டிஎஸ்பி ஆத்மநாதன், உலகம்பட்டி இன்ஸ்பெக்டர் கலாராணி ஆகியோர் நேரில் பாராட்டினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments