விராலிமலை அருகே அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-பணம் கொள்ளை




விராலிமலை அருகே அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


விராலிமலை தாலுகா செவனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரை சவரி முத்து (வயது 45). தச்சுதொழிலாளி. இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் தனது மனைவியுடன் சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது ெதரியவந்தது. இதுகுறித்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

நகை-பணம் கொள்ளை

இதேபோல் செவனம்பட்டி கிராமம் துரை சவரி முத்து வீட்டின் அடுத்துள்ள வீட்டில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி (67). கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்று உள்ளனர். ேவலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்துபோது வீட்டின் பூட்டை உடைத்து கதவு திறந்து கிடந்ததது. இதையடுத்து வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

விராலிமலை அருகே அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 பேர் படுகாயம்

*விராலிமலை தாலுகா, கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). இவரும் அதே ஊரை சேர்ந்த ராசு மகன் குமார் (35) என்பவரும் சம்பவத்தன்று பேராம்பூரில் இருந்து கல்லுப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். முருகேசன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்ல குமார் பின்னால் அமர்ந்து சென்றார். மலம்பட்டியில் இருந்து பேராம்பூரை நோக்கி மேலக்காடு மூக்கன் மகன் டேவிட் (30) என்பவர் ஓட்டிச்சென்ற டிராக்டர் எதிர்பாராதவிதமாக முருகேசன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முருகேசன், குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டதாரி பெண் கடத்தலா?

*கந்தர்வகோட்டை அருகில் உள்ள மெய்குடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருஞானம் மகள் திவ்யா (24). பட்டதாரியான இவர், கல்லுப்பட்டியில் உறவினரான செல்வம் என்பவரின் வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று கல்லுப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து வெளியே சென்ற திவ்யா வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

*இதேபோல் கந்தர்வகோட்டை அருகே கோமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகள் வைஷாலி (19). இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவரை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகார்களின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து திவ்யா, வைஷாலி ஆகிய 2 பேரையும் யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments