காரைக்குடி- திருவாரூர் ரயில் வழிதடத்தில் சென்னைக்கு விரைவு தொடங்க வேண்டும் -நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் கோரிக்கை..காரைக்குடி- திருவாரூர் ரயில் வழிதடத்தில் சென்னைக்கு விரைவு தொடங்க வேண்டும் -நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்
நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் வெளியிட்டுள்ள கோரிக்கையில் 

பெறுதல்

மாண்புமிகு ரயிவே துறை அமைச்சர் 
ரயில்வே துறை அமைச்சகம் 
புதுடில்லி

வழி :

நாடாளுமன்ற உறுப்பினர் தஞ்சாவூர்

பொருள் : மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க பணிந்து கோருதல் சார்பு.

நாங்கள் மாற்றுத்திறனாளிகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த சமூகம் நாங்கள் பயணம் மேற்கொள்ள இலகுவானது ரயில் பயணம் தான் எங்கள் பயணம் இனிமையாக அமைய எங்களின் பின்வரும் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பி உடனடியாக நிறைவேற்றி தர பணிந்து கோருகிறேன்.

1. காரைக்குடி- திருவாரூர் ரயில் வழிதடத்தில் சென்னைக்கு விரைவு சேவை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

2. காரைக்குடி- திருவாரூர் ரயில் வழிதடத்தை மின்மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

3. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வழியாக காரைக்குடி வரை செல்லும் டெமோ ரயிலை மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது அத்திட்டத்தை உனடியாக தொடங்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. பட்டுக்கோட்டை - மன்னார்குடி புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது அத்திட்டத்தை உனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. காரைக்குடி - திருவாரூர் ரயில் வழிதடத்தில் சென்னைக்கு பகல் நேரத்தில் விரைவு சேவை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments