அறந்தாங்கியில் வருகிற (ஏப்.17) சிகரம் இலவச நீட் பயிற்சி மைய சேர்க்கைக்கான முன்பதிவு தொடக்கம்:


அறந்தாங்கி IMA மற்றும் திசைகள் மாணவர் வழிகாட்டி அமைப்பு இணைந்து நடத்தும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச சிகரம் நீட் பயிற்சி மையத்தின் வகுப்புகள் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிந்த பின் நடத்தப்பட இருக்கின்றன. 

அதற்கான மாணவர் பதிவு எதிர்வரும் 17/04/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கின்றது. எனவே மாணவர்கள் தங்களின் பெற்றோரோடு வருகை புரிந்து தங்களது பதிவை மேற்கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம்.

இடம்: IMA அரங்கம், பொற்குடையார் கோயில் பின்புறம், அறந்தாங்கி.
நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறும்.

பதிவின் போது மாணவர்கள் எடுத்து வர வேண்டிய ஆவணங்கள்:

*ஆதார் அட்டை நகல்.
*பள்ளி அடையாள அட்டை நகல்.
*நீட் தேர்வுக்கு விண்ணப்ப நகல்.
*10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பிற்கான மதிப்பெண் பட்டியல் (இருப்பின்) நகல்.
*புகைப்படம் - 1

தொடர்பு எண்: 9791989169

Dr.ச.தெட்சிணாமூர்த்தி,
ஒருங்கிணைப்பாளர்,
சிகரம் இலவச நீட் பயிற்சி மையம்,
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments