புதுக்கோட்டையில் மண்டல அளவிலான செஸ் போட்டி
புதுக்கோட்டையில் தனியார் பள்ளியில் சோழ மண்டல அளவிலான செஸ் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 9, 10, 11, 13 ஆகிய வயதிற்குட்பட்ட மற்றும் அனைத்து வயதுடையவர்களுக்கான பிரிவுகளில் போட்டி நடந்தது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. செஸ் போட்டி குறித்து பொதுமக்கள் மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவர்களது திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாக இந்த போட்டி நடைபெற்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை மாஸ்டர்ஸ் செஸ் அகாடமியினர் செய்திருந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments