சிலம்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க நடவடிக்கை

    
சென்னை-செங்கோட்டை இடையே சிலம்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.


சிலம்பு எக்ஸ்பிரஸ்
 
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 2013-ம் வருடம் ஜூன் மாதம் 22-ந் தேதி முதல் சென்னையில் இருந்து காரைக்குடி வரை வாரம் இருமுறை ரயிலாக இயக்கப்பட்டது. பின்னர் இது மானாமதுரை வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 4-ந்தேதி முதல் இந்த ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டு வாரம் மூன்று முறை இயக்கப்பட தொடங்கியது.

தற்போது இந்த ரயில் வருகிற 15-ந் தேதி முதல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்  ரயிலாக மாற்றப்படுகிறது. புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை செங்கோட்டைக்கு 8.45 மணிக்கு சென்றடைகிறது...

நடைமேடை நெருக்கடி 

மறு மார்க்கத்தில் வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செங்கோட்டையில் மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது.
 
இந்த ரயிலுடன் வாரம் இரண்டு முறை இயக்கப்பட்ட பல்வேறு ரயில்கள் வாரம் 5 முறை இயக்கப்படும் ரயில்களாக மாற்றப்பட்டுவிட்டன. 

இந்தநிலையில் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே தொடர்ந்து வாரம் 3 முறை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது சூப்பர் பாஸ்ட் ரயிலாக இயக்கப்பட உள்ளது. நடைமேடை நெருக்கடி காரணமாக சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்க முடியவில்லை என ரயில்வே நிர்வாகம் காரணம் கூறி வந்த நிலையில் தற்போது சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றப்பட்டு விட்டதால் பயண நேரத்தில் 30 நிமிடங்கள் குறையும் நிலையில் இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

அவசியம் 

எனவே தென்னக ரயில்வே நிர்வாகம் சிலம்பு சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் கோரியுள்ளனர். தென் மாவட்ட எம்.பி.க்களும் இதுகுறித்து 
ரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments