கோபாலப்பட்டிணத்தில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் சிறப்பு கிராம சபை கூட்டம்!

கோபாலப்பட்டிணத்தில் நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
 
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையர்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் 18.04.2022 திங்கட்கிழமை கோபாலப்பட்டிணம் சமூக சேவை மைய வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரா.சீதாலெட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய உதவிப்பொறியாளர் கலையரசன் கலந்து கொண்டார். 

கூட்டத்தில் அனைத்து கிராமம் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22 ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்ட பணிகள் சரி பார்ப்பு மற்றும் அதனை இறுதி செய்து கிராமசபையில் ஒப்புதல் பெறப்பட்டது.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் ஊராட்சி செயலாளர் ஸ்டெல்லா வரவேற்றார்.

கிராமசபையில் ஒப்புதல் பெறப்பட்ட பணிகள்:

கோபாலப்பட்டிணம்:
1.கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் மேம்பாடு செய்தல் - ரூ.1772000
2. கோபாலப்பட்டிணம் தவ்ஹீத் பள்ளி வாசல் குடியிருப்பு சிமெண்ட் சாலை அமைக்க - ரூ.506000
3.கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கழிப்பறை வசதி அமைத்தம் - ரூ.396000

ஆர்.புதுப்பட்டிணம்:
1.ஆர்.புதுப்பட்டிணம் முஸ்லீம் தெரு குடியிருப்பு சிமெண்ட் சாலை அமைக்க - ரூ.484000

முத்துக்குடா
1.முத்துக்குடாவில் சந்தை அமைத்தல் - ரூ.590000
2.முத்துக்குடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெண்கள் கழிப்பறை வசதி அமைத்தல் - ரூ.490000

1.நாட்டாணி குடியிருப்பு சிமெண்ட சாலை அமைத்தல் - ரூ.484000
2.நாட்டாணியில் சமத்துவ சுடுகாடு அமைத்தல்

பசுமை மற்றும் சுத்தமான கிராமம் (பலன் தரும் மரங்கள் வளர்த்து ஊராட்சிக்கு வருமானம் வர வழிவகை செய்தல்) - ரூ.590911எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments