தமிழகத்தில் நாளை ஏப்ரல் 23 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை பள்ளிகல்வித்துறை உத்தரவு.


1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி பள்ளி மேலாண்மை குழுக்கள் உருவாக்கப்பட்டன. அரசு பள்ளிகளில் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சியில் பெற்றோரின் பங்கும் இருக்க வேண்டும் எனும் நோக்கில் இவை கொண்டுவரப்பட்டன.

ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் இக்குழு அமைக்கப்பட வேண்டும்.  இக்குழுக்களில் மொத்தம் 20 பேர் உறுப்பினர்களாக இருப்பர். அதில் 15 பேர் பெற்றோர்களாக இருக்க வேண்டும். ஆசியர்கள், கல்வி ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவிக் குழுவினர் ஆகியோர் மீதி 5 உறுப்பினர்களாக இருப்பர்.

இக்குழுவில் தலைவராக பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் தான் இருக்க வேண்டும். மேலும் இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனிடையே, மாணவர்களின் பெற்றோராக உள்ள தூய்மை பணியாளர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், திர்நங்கைகள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் ஆகியோரில் ஒருவர் துணைத்தலைவராக இருக்க வேண்டும்..

ஊர் மக்களின் பங்களிப்போடு பள்ளியின் தேவைகளை நிறைவேற்றி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை இக்குழு மூலம் செயல்படுத்தப்படும். தலைமையாசிரியர் இந்த குழுவின் உறுப்பினர் மற்றும் கூட்ட அழைப்பாளராக இருப்பார். பள்ளி மேலாண்மை குழுக்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக இன்னும் மறுகட்டமைப்பு செய்யப்படவில்லை.இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்யவும் உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டம் நாளை (ஏப்ரல் 23) அனைத்து அரசு பள்ளிகளில் நடைபெறுகிறது. இதனால் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை என்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments