தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24இல் சிறப்புக் கிராம சபைக் கூட்டம்! தமிழக அரசு அறிவிப்பு






சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் மூலம் கிராம சபைக் கூட்டம் கூட்டப்படுகிறது. பொதுவாகக் குடியரசு தினம், தொழிலாளர் நாள், சுதந்திர நாள், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் இந்த கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 24ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்புக் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து இந்த சிறப்புக் கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்ட விவரங்களை meetingonline.gov.in தளத்தில் பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments