நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் ஏப்.18 (நாளை) சிறப்பு கிராம சபை கூட்டம்நாட்டாணி புரசக்குடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
 
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையர்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் நாளை 18.04.2022 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பற்றி விவாதித்து வேலைகள் தேர்வு செய்ய சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.


இந்த கூட்டத்தில் நாட்டாணிபுரசக்குடி ஊரட்சிக்கு உட்பட்ட கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பிற தேவைகள் குறித்து கலந்தாய்வு நடைபெற்று வேலைகள் தேர்வு செய்யப்படும். அவசியம் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இதில் இளைஞர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டு ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பிற தேவைகள் குறித்து விவாதிக்கவும்.

நமது ஊராட்சி! நமது அதிகாரம்!!

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments