புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 3 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்தது

 
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 3 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பூதகுடி சுங்கச்சாவடி உள்ளது. இங்கு ஒரு வழி போக்குவரத்திற்கு ரூ.5 முதல் ரூ.60 வரையிலும், இருவழி போக்குவரத்திற்கு ரூ.15 முதல் ரூ.85 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.90-க்கு பதிலாக ரூ.5 உயர்ந்து ரூ.95 புதிய கட்டணமாகவும், இலகுரக வணிக வாகனங்கள் மற்றும் மினி பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணமாக ரூ.140-ம், தற்போது ரூ.15 உயர்ந்து ரூ.155 புதிய கட்டணமாகவும், பஸ், டிரக் உள்ளிட்ட வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.295-லிருந்து புதிய கட்டணம் ரூ.325-ஆகவும், 3 அச்சுகள் கொண்ட வணிக வாகனங்களின் பழைய கட்டணம் ரூ.325-லிருந்து புதிய கட்டணம் ரூ.355-ஆகவும், 4 முதல் 6 அச்சு கொண்ட வாகனங்களுக்கு பழைய கட்டணம் ரூ.465-லிருந்து தற்போது ரூ.510-ஆகவும், 7 அல்லது அதிக அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கான பழைய கட்டணம் ரூ.565-லிருந்து தற்போது ரூ.625 ஆகவும் உயர்த்தி சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்துள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments