அறந்தாங்கி :மாணவர்கள் மீது குடிநீர் வண்டி பாய்ந்தது:பொதுமக்கள் சாலைமறியல்


புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி காரைக்குடி சாலையில் பள்ளி மாணவர்கள் மீது  குடிநீர் வண்டி மோதி விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் செய்தனர்.

அறந்தாங்கி காரைக்குடி சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும்  முகம்மதுஆதில், முகம்மது ஃபரீத்   ஆகியோர் பள்ளி விட்டு சைக்கிளில் வீட்டுக்கு செல்லும்போது அறந்தாங்கி நோக்கி வேகமாக வந்த குடிநீர் வண்டி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சைக்கிளில் சென்ற மாணவர்கள் மீது மோதி சாலைஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி நின்றது.

குடிநீர் வாகனம்  மோதியதில் மாணவன்  முகமதுஆதில் வலதுகாலில்  கடுமையான எலும்புமுறிவு ஏற்பட்டும்  
மற்றுமொறு மாணவனான  முகம்மது ஃபரீத் லேசான இரத்தகாயத்துடன்  முதலுதவி சிகிச்சைக்கு அறந்தாங்கி அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர்
காலில் எலும்புமுறிவு ஏற்பட்ட முகம்மதுஆதில் மேல் சிகிச்சைக்காக மதுரை அழைத்து செல்லப்பட்டார்.


இச்சம்பவத்தை அறிந்த காரைக்குடி சாலையில் உள்ள பொதுமக்கள் விபத்து ஏற்பட்டபகுதியில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடப்பதால் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு முன்பாக வேகத்தடை அமைத்து தரவேண்டுமென அறிவுறுத்தியும், விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய குடிநீர் வாகனத்தின்  ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தியும் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அங்கிருந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதானமாக பேசி மறியல் போராட்டத்தை கைவிட செய்தனர்.இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments